முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு எப்படி குளிப்பது?

Loading...

முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு எப்படி குளிப்பதுஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் முடியைப் பராமரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துவதோடு, ஹேர் பேக்குகளையும் போடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் தினமும் தலைக்கு குளித்து வருவார்கள்.

முடியை அலசவும்

எப்படி துணியைத் துவைக்கும் முன், நீரில் ஒருமுறை அலச வேண்டுமோ, அதேப்போல் தலைக்கு ஷாம்பு போடும் முன் முடியை நீரில் நன்கு அலச வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள மயிர்துளைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற உதவியாக இருக்கும்.

நீளமான முடிக்கு கண்டிஷனர்

உங்களுக்கு முடி நீளமாக இருந்தால், முதலில் ஷாம்பு போடுவதற்கு முன், கண்டிஷனர் போடுங்கள். இதனால் முடியின் முனைகள் ஆரோக்கியமாக இருப்பதுடன், க்யூட்டிகிள்களில் ஏதேனும் துளைகள் இருந்தால், அவை நிரப்பப்பட்டு, மென்மையாகி, முடி பட்டுப் போன்று இருக்கும்.

ஷாம்பு ஸ்கால்ப்பிற்கு மட்டுமே!

ஷாம்புவை ஸ்கால்ப்பிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். முடியின் முனை வரைப் பயன்படுத்தினால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் முடியில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, முடியின் முனைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும். அதுவே ஸ்காப்பிற்கு மட்டும் போட்டு அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் ஸ்கால்ப்பை வறட்சி அடையாமல் தடுக்கும்.

ஒருமுறை போதும்

தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று இரண்டு முறை ஷாம்பு போட வேண்டாம். அப்படி ஷாம்பு போட்டால், அவை தலையில் உள்ள எண்ணெய் பசை அனைத்தையும் முற்றிலும் வெளியேற்றி, ஸ்காப்பின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். எனவே ஒருமுறை ஷாம்பு போடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply