முகப் பரு மறைய

Loading...

முகப் பரு மறைய* அதிக எண்ணெய்ப் பசை இருந்தால், முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய்ப் பசை இல்லாமல் பார்க்கவும். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால், முகப் பரு ஏற்படுகின்றது
* முகப்பரு உள்ளவர்கள், முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவவேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித் துணியைப் பயன்படுத்த வேண்டும். .
* மேலும் மன இறுக்கம், மலச் சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.
* உணவு முறை மாறுபாட்டாலும் முகப்பரு ஏற்படுகின்றது.
* தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம்.
* தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும்.
* முட்டையின் வெள்ளைக் கருவினை முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும்.
* முகப்பரு வராமல் இருக்க மாலை ஒரு கைப்பிடி வேப்பிலையை 1 கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால், முகத்தில் பரு வராது. முகம் பளிச்சென்று இருக்கும்.
* பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி , முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காயவைத்து, பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால், முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
* 3 மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முகம் கழுவ சோப் அதிகமாக பயன்படுத்தாதீர்கள்
.* சோற்றுக் கற்றாழையில் உள்ள ஜெல்-ஐ முகத்தில் தடவிவர பருக்கள் மறையும்.
* காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.
கரும் புள்ளிகள்: மறைய:
* எலுமிச்சை சாற்றுடன், 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு, 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவ, கரும்புள்ளிகள் மறையும்.
* தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்..

Loading...
Rates : 0
VTST BN