முகத்தில் உள்ள முடியை அகற்றுதல்

Loading...

முகத்தில் உள்ள முடியை அகற்றுதல்முகத்தில் முடி இருந்தால், ஒரு ப்யூட்டி பார்லருக்குச் சென்று, ‘ த்ரெடிங்’ மற்றும் ‘ வேக்ஸிங்’ செய்து கொள்ளலாம். உதடுகளுக்கு மேலுள்ள இடத்துக்கு ‘ த்ரெடிங்க்’ பலனளிக்கும். முகத்தின் பக்கவாட்டுக்கு வேக்ஸிங் பொருத்தமாக இருக்கும். அல்லது, லேசர் முறையிலும் முடியை அகற்றலாம்.
இயற்கை அழகுக் குறிப்புகள் முகத்திலுள்ள முடியை ஒரேயடியாக அகற்ற முடியாது. ஆனால், தொடர்ந்து , ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிகிச்சை அளித்தால், இயற்கை முறை முடி வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்.
சர்க்கரை, எலுமிச்சை ஜூஸ் இவற்றுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து, அதை முகத்தில் முடியின் போக்கில் தடவ வேண்டும். காய்ந்த பிறகு முகத்தைக் கழுவவும். இதனை வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ செய்து வந்தால், பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூளுடன் பால் சேர்த்து பேஸ்ட் போலாக்கி, முகத்தின் மீது வட்டமாக தேய்க்கவும். முகத்தின் மீது வெளிரிய மஞ்சள் வண்ணம் படியும். முடி லேசாக மறையத் துவங்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply