மிளகு குழம்பு

Loading...

மிளகு குழம்புபெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 4
கருவடாம் – 2 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – 10 இலை
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்

வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
புளியை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு பாதி வெந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றவும். குழம்பு சுண்டியவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply