மிளகு அடை

Loading...

மிளகு அடைபச்சரிசி – 3 கப்
தேங்காய் துருவல் – 2 கப்
மிளகு – ஒரு மேசைக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்கவும்.

மிளகினை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் மாவாக இல்லாமல், மணல் போல் இருந்தால் நல்லது.

சீரகத்தையும் மிளகைப் போலவே மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.

கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மாவு கட்டியில்லாமல் நன்கு பதமாக இருக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி காய விடவும். பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கையளவிற்கு எடுக்கவும்.

சூடேறிய தோசைக்கல்லில் மாவை அடைப் போல் தட்டவும். கையினால் அழுத்தி விட்டு சற்று பெரிய அடை போல் பரப்பவும். மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடாது. சற்று கனமான அடையாக தட்டவும்.

அடை லேசாக வெந்ததும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி சில நொடிகள் வேகவிடவும்.

பிறகு அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய்யை மேலே விட்டு வேகவிடவும்.

சற்று நிறம் மாறி இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும். நீண்ட நேரம் வைத்திருந்தால் கருகிவிடும். மாலை நேரங்களில் சுவைக்க அருமையான அடை இது. பிடித்தமான சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply