மில்க் ஸ்வீட்ஸ்

Loading...

மில்க் ஸ்வீட்ஸ்பால்
சீனி
ஏலக்காய் தூள்
முந்திரித் தூள்
முந்திரி சீவல்
பிஸ்தா சீவல்
சாரப்பருப்பு
வண்ணப் பொடிகள்

மேற்கண்ட முறையில் கோவாவை தயார் செய்து கொள்ளவும். அதை நன்கு பிசைந்து தனியே வைக்கவும். சிறிது நேரம் பிசைந்து வைத்தால் சற்று கெட்டியாகிவிடும். அதனை அப்படியே வைத்திருந்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். நிறைய வகை இனிப்புகள் செய்ய விரும்பினால் இது போல் வைத்திருந்து செய்யலாம். ஒன்று இரண்டு வகைதான் என்றால் அப்படியே இனிப்புகள் செய்ய பயன்படுத்தவும்.

இப்போது தூத் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவைக்கேற்ப கோவாவை எடுத்துக் கொண்டு ஒரு வெறும் வாணலியில் உதிர்ந்துக் கொட்டி, இளஞ்சூட்டில் கிளறிவிடவும். சூட்டில் கோவா உருகி சற்று நீர்த்தாற்போல் வரும்.

நன்கு இளகி வரும் வரை கிளறவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கோவாவை வாணலியின் ஓரங்களில் பரப்பிவிட்டு பிறகு கிளறவும். இறக்கி வைத்து கிளறியபின் கோவா சற்று கெட்டியாகிவிடும். என்ன வகை இனிப்பு செய்ய இருக்கின்றோமோ அதற்கு ஏற்றார்போல் இளக்கமாகவோ, இறுக்கமாகவோ கிளறி வைத்துக் கொள்ளவும்.

தூத் பேடாவிற்கு ஏலக்காயை நல்ல பொடியாக்கி, ஒரு மெல்லிய துளைகள் கொண்ட சல்லடையில் சலித்து, கோவாவில் கொட்டவும். அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும். பிறகு இவற்றை சிறு சிறு உருண்டைகளாக, சிறிய எலுமிச்சை அளவில் உருட்டி வைக்கவும்.

படத்தில் உள்ளதுபோல் தூத்பேடா அச்சு கடைகளில் கிடைக்கின்றது. இது தூத்பேடா வடிவம் கொண்டு வர பயன்படுகின்றது.

கோவா உருண்டைகளை அச்சு கொண்டு அழுத்தினால் தூத்பேடா வடிவம் கிடைத்துவிடும். உருண்டைகளின் மீது சிறிது முந்திரி சீவல், பிஸ்தா சீவல் அல்லது இரண்டு சாரப்பருப்பு, ஒரு உலர்ந்த திராட்சை இப்படி எதையாவது வைத்து அச்சினால் அழுத்திவிடவும்.

கோவாவை வாணலியில் இட்டு இளகச் செய்யும் போது, அதில் தேவையான வண்ணங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். சுவைக்கு தகுந்தாற்போல் எசன்ஸ் துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி கலர் கலராக பால் பேடா செய்யலாம். விதிமுறைகள் கிடையாது.

அடுத்து டூட்டி ப்ரூட்டி சேர்த்து எப்படி மில்க் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கும் செய்து வைத்துள்ள கோவாவை வாணலியில் போட்டு நன்கு இளகும் அளவிற்கு சூடாக்கவும். அதில் ட்யூட்டி ப்ரூட்டி விரும்பிய அளவிற்கு சேர்க்கவும். நன்கு கிளறிவிடவும்.

பிறகு எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

பின்னர் அதனை கைகளால் தேய்த்து பிசைந்து விடவும். கோவா இன்னும் சற்று கெட்டியாகும்.

அதனை அரை அங்குல உயரத்திற்கு பரப்பி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஓரங்களில் வெட்டுப்படுவதை மீண்டும் லேசாகப் பிசைந்து கேக்குகளாக்கிக் கொள்ளவும். கடைகளில், பார்ப்பவர்களை கவர்வதற்காக கேக்குகளின் மேலே சில்வர் காகிதங்களை ஒட்டுவார்கள். வீடுகளில் தயாரிக்கும்போது அதனை தவிர்த்துவிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply