மின்னல் வேகத்தில் பயணிக்கும் அதி நவீன ரக விமானம்

Loading...

மின்னல் வேகத்தில் பயணிக்கும் அதி நவீன ரக விமானம்லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு 30 நிமிடங்களில் சென்றடையக்கூடிய ஜெட் விமானம் ஒன்றினை கனடாவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இது ஒலி அலையினை விடவும் 10 மடங்கு வேகமாகவும், கொன்கோட் விமானத்தினை விட 5 மடங்கு வேகமாகவும் பறக்கக்கூடியதாக இருப்பதுடன், 75 பயணிகளை ஒரே நேரத்தில் தாங்கிச் செல்லக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

அதாவது மணிக்கு 12,250 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ் விமானம் ஹைட்ரிஜனில் இயங்கக்கூடியவாறு இருக்கின்றது.

இதேவேளை இவ்வாறானதொரு ஜெட் விமானத்தினை வடிவமைத்து விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்துவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply