மாங்காய் நெல்லிக்காய் தொக்கு

Loading...

மாங்காய் நெல்லிக்காய் தொக்குதேவையான பொருட்கள்:

மாங்காய் – 1 பெரியது

நெல்லிக்காய் – 200 கிராம்

மிளகாய்தூள் – 200 கிராம்

உப்பு – 11/2 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்

கடுகு – டீஸ்பூன்

வெல்லம்- சிறிதளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

• மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவேண்டும்.

• மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

• நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும்.

• இப்பொழுது சுவையான மாங்காய் நெல்லிக்காய் தொக்கு தயார்.

மருத்துவ பயன்கள்:

நெல்லிக்காய் இதயத்தை வலிமைப்படுத்தும். நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை குறையச் செய்யும். நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply