மழை காலங்களில் மின் சாதனத்தை பயன்படுத்தும்போது என்ன செய்ய வேண்டும்?

Loading...

மழை காலங்களில் மின் சாதனத்தை பயன்படுத்தும்போது என்ன செய்ய வேண்டும்மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்க வேண்டும்.

குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும்.

தொலைக்காட்சி ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்டக்கூடாது.

ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த கூடாது.

மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது. மின்வாரிய அலுவலகத்துக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும்.

மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும்.

மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க கூடாது.

தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டது எனில், உடனே மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட வேண்டும்.

இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்க கூடாது.

இடி அல்லது மின்னலின் போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி. மிக்ஸி, கிரைண்டர், கணனி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply