மழைக் காலத்தில் கூந்தல் பராமரிப்பு

Loading...

மழைக் காலத்தில் கூந்தல் பராமரிப்புகோடைக் காலத்தில் அதிகப்படியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல், மழைக் காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப் பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும். அது மட்டுமின்றி, ஈரப் பதத்துடன் எண்ணெய்ப் பசை இருந்தால், கூந்தலிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.
ஆகவே மழைக் காலத்தில், கூந்தலிலிருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க, கூந்தலை அன்றாடம் முறையாகப் பராமரித்து வரவேண்டும்.
ஸ்கால்பானது சுத்தமாக இல்லாவிட்டால், மழைக் காலத்தில் அதிகப்படியாக ஈரப் பசையினால் அரிப்புகளுடன் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே வாரத்திற்கு மூன்று முறை ஷாம்பூ போட்டு அலசினால், கூந்தலில் தூசு படிவதைத் தடுக்கலாம். அப்படி பயன்படுத்தும் ஷாம்பூ மழைக் காலத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும் ஷாம்பூவைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், இவை இன்னும் கூந்தலில் எண்ணெய்ப் பசையை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே இயல்பாகவே, எண்ணெய்ப் பசை கொண்டவர்கள் மைல்டு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் ஷாம்பூவிற்குப் பதிலாக நெல்லிக்காய், சீகைக்காய் போன்றவற்றைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது இன்னும் சிறந்தது. மேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமானால், கூன்டஹ்லுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும். அதிலும் விலை அதிகமாக இருந்தாலும், நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். அல்லது இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சைச் சாறு, பேக்கிங்சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது, மழைக் காலங்களில் ஹேர் ஸ்ட்ரைனின், ஹேர் கலரிங் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த செயல்களைத் தவிர்பப்து நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply