மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

Loading...

மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!சரும செல்களை பாதுகாக்கும்

மலை நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சரும புற்றுநோய் வருவதும் தடுக்கப்படும்.

இதய நோயைத் தடுக்கும்

மலை நெல்லிக்காய் இரத்த கொலஸ்ட்ராலின் அளவை சீராக பராமரிக்கும். அதிலும் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து, அடைப்பை ஏற்படுத்தி, அதனால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும்

மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்பட்டு, இன்சுலினை சரியான அளவில் சுரக்க உதவும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இளமையைத் தக்க வைக்கும்

மலை நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவை கொலாஜென் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, வைட்டமின் ஏ சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும். அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN