மரவள்ளி கிழங்கு கறி

Loading...

மரவள்ளி கிழங்கு கறிமரவள்ளிக் கிழங்கு – 400 கிராம்
இறால் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 7
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – ஒன்று
குழம்பு பொடி – ஒரு தேக்கரண்டி
தேங்காய் முதற்பால் – 2 மேசைக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

கிழங்கினை தோல் உரித்து அதன் நடுவில் உள்ள வேரினை எடுத்து சின்ன சின்ன துண்டங்களாக வெட்டி வைக்கவும்.
இறாலினை சுத்தம் செய்து சிறிது உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றையும் சின்னதாக அரிந்து எடுக்கவும்.
கிழங்கு, உப்பு, குழம்பு பொடி என்பவற்றை போட்டு, பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கிழங்கு நன்கு கரையும் வரை அவிக்கவும்.
அவிந்தபின் குழிக்கரண்டியால் கிழங்கை மசித்து விடவும்.
பின்பு இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இறால் என்பவற்றை போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு அதனுள் அவித்த கிழங்கை போட்டு தேங்காய் பாலை விட்டு கிளறி, 5 நிமிடம் மெல்லிய தீயில் மூடி விட்டு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply