மயொனைஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்! ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

Loading...

மயொனைஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்! ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!மயொனைஸ்(MAYONNAISE) என்பது முட்டையில் தயாரிக்கப்படும் சாஸ் வகை உணவாகும்.
ஐரோப்பிய நாட்டு மக்களால் அதிகம் சாப்பிடப்படும் மயொனைஸை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

வினிகர், மிளகு, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை எண்ணெய்யில் சேர்த்து கலக்கினால் மயொனைஸ் தயாராகிவிடும்.

வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் இதனை குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும், ஏனெனில் இதில் கொழுப்பு அதிகம் நிறைந்திருக்கும்.

பெரும்பாலான மயொனைஸ் சோயாபீன் எண்ணெய், சோள எண்ணெய் அல்லது தாவரஎண்ணெய்களில் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றில் Omega 6 fatty acid நிறைந்திருப்பதால் இது மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும், ஏராளமான அமெரிக்கர்கள் ஒமோகா 3 யை விட ஒமேகா 6 ஐ அதிகம் பெற்றிருக்கின்றன.

ஆனால், இது இதயநோய்கள், சிலவகை புற்றுநோய்கள், டைப் 2 நீரிழிவு நாய் போன்றவை வருவதற்கு காரணமாகின்றன. அதனால் இந்த மயொனைஸை ஆலிவ் எண்ணெய்யில் தயார் செய்து சாப்பிடலாம்.

மேலும், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடும் போது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு இதனை சாப்பிடவேண்டும் என்று ஆசையாக உள்ளது என்றால் ஆலிவ் ஆயில், முட்டை கரு மற்றும் லெமன்சாறு ஆகியவற்றை கொண்டு தயார் செய்து சாப்பிடுங்கள்.

இருப்பினும் இதில் அதிக கொழுப்பு மற்றும் புரதங்களே நிறைந்துள்ளன, அதனால் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply