மஞ்சள் காமாலையா : அறிந்து கொள்வது எப்படி !!

Loading...

மஞ்சள் காமாலையா அறிந்து கொள்வது எப்படி !!சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, சாப்பாடு பிடிக்காமல் போவது, வாந்தி வருவது, மலம் களிமண் போன்று வெளியேறுவது, தோலில் அரிப்பு ஏற்படுவது, உடல் சோர்வு போன்றவைகள் மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்.
இது போன்றவற்றைத் தவிர்க்க ஹெபடைடிஸ் ஏ போன்ற தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஹெபடைடிஸ் பி க்கும் தடுப்பூசி உண்டு. அதை 0, 1, 6 என மூன்று மாதங்களில் ஒரே தேதியில் போட்டுக் கொள்வது அவசியம்.
இதைத் தவிர மஞ்சள்காமாலை பித்தப்பைக் கற்களாலும் உருவாகலாம். கணையத்தில், பித்தப்பையில், பித்த நீர் சுரக்கும் நாளங்களில் என்று எதிலாவது புற்றுநோய் ஆரம்பித்திருந்தாலும் மஞ்சள் காமாலை வரலாம்.
ஹெபடைடிஸ் குரூப் மஞ்சள் காமாலையாக இருப்பின் மருந்தினால் சிகிச்சை அளிப்பதும், சத்துள்ள உணவை ஆகாரமாக கொடுப்பதும், பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருமியை அழிக்க மருந்து கொடுப்பதும்தான் உரிய சிகிச்சையாக அமையும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும்போது சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போவதற்கு காரணம் ரத்தத்தில் உள்ள பில்லிரூபின் என்கிற மஞ்சள் நிறமி அதிகமாவதுதான்.
ரத்தத்திலுள்ள அணுக்கள் எல்லாம் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகின்றன. அந்த அணுக்களையெல்லாம் 120 நாட்கள்தான் உயிர் வாழும். அதற்குப் பிறகு அந்த அணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு அழிகின்றன. அப்படி மண்ணீரலால் அணுக்ககள் உடைக்கப்படும்போது ‘பில்லிரூபின்’ என்ற பொருள் உருவாகிறது. அதன் பின் என்ஸைம், உப்பு சேர்ந்து ஈரலில் இணைந்த பில்லி ரூபினாக மாறுகிறது. பின் அது பித்த நாளங்களுக்குள் செல்கிறது.
பித்தக் குழாயிலிருந்து அந்த பில்லி ரூபின் சிறுககுடலுக்குள் இறங்கி செரிமானத்திற்கு உதவி அதாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டிலுள்ள கொடுப்பு மற்றும் சத்துக்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு பகுதி உறிஞ்சிக் கொள்ளப்பட்டு மற்றொரு பகுதி மனிதக் கழிவுடனும் வெளியேறுகறிது.
இந்த செய்முறைக்குப் பயன்படுவதுதான் இணைந்த பில்லிரூபின் (Conjugated Billrubin ) இந்த பில்லி ரூபின் அதிகமாகும் போது மஞ்சள் காமாலை வரும்.
ஒரு மனிதனுக்கு இருபத்தியோரு வயது வரை மட்டுமே சில தொற்று நோய்களைத் தவிர்க்க மண்ணீரலின் அவசியம் ஏற்படுகிறது. அதன்பிறகு அந்த உறுப்பை எடுத்து விடுவதால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.

ஈரலினால் உருவாகும் மஞ்சள்காமாலைக்கு ‘ஹெபாடிக் ஜாண்டிஸ்’ என்று பெயர்.
இணைந்த பில்லிரூபின் ஜுரணத்திற்காக பித்த நீரில் வரும் போது, அந்த பித்தக் குழாயில் தடை ஏற்பட்டிருந்தால் அப்ஸ்ட்ரக்டிவ் ஜானண்டிஸ் (Obstructive Jaundice ) உருவாகும்.
தடைகளினால் மஞசள்காமாலையை உருவாக்குபவை பித்தப்பை கற்களினால் ஏற்படும் அடைப்பும், பித்தப்பையில் ஏற்படும் புற்றுநோயினால் ஏற்படும் அடைப்பும்,பித்த குழாய் சிறுகுடலோடு இணையுமிடத்தில் உண்டாகும் புற்றுநோயால் அடைப்பும்,பொது பித்தக் குழாயில் புழு அடைத்துக் கொண்டாலும் தடை ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.அடுத்து புற்று நோயினால் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.
இதற்கு அறுவைசிகிச்சைதான் சிறந்த மருந்து. ஆகவே இந்த மஞ்சள்காமாலையை அறுவை சிகிச்சை மஞ்சள் காமாலை என்கிறார்கள்.
ஆகவே மஞ்சள் காமாலை என்னும் போது காரணத்தைக் கண்டுபித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply