ப்ரெட் ஃப்ரைஸ்

Loading...

ப்ரெட் ஃப்ரைஸ்ப்ரெட் துண்டுகள் – 4
கடலை மாவு – 3 மேசைக்கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் / மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரித்தெடுக்க

ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி விட்டு ஒவ்வொரு ப்ரெட்டையும் நீளவாக்கில் நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

அதனுடன் சீரகம் மற்றும் மிளகுத் தூள் அல்லது மிளகாய்த் தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரு பக்கங்களும் சிவக்க பொரித்தெடுக்கவும்.

சுலபமாக செய்யக்கூடிய ப்ரெட் ஃப்ரைஸ் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply