பொரிவிளங்காய் உருண்டை

Loading...

பொரிவிளங்காய் உருண்டைதேவையான பொருட்கள்:

பாசிப்பயறு – ஓர் ஆழாக்கு,

கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் – தலா கால் ஆழாக்கு,

வெல்லம் – அரை ஆழாக்கு,

ஏலத்தூள் – ஒரு சிட்டிகை,

சுக்குத் தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து ஆறவைத்து நன்றாகப் பொடிக்கவும்.

• வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

• சத்தான பொரிவிளங்காய உருண்டை ரெடி.

• குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச்சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்சனைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply