பொடுகைப் போக்கும் எளிய வழி முறைகள்

Loading...

பொடுகைப் போக்கும் எளிய வழி முறைகள்வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை லேசான ஹெர்பல் ஷாம்பூவை உபயோகித்து முடியை அலசவும். குறைந்த அளவு ஷாம்பூ உபயோகித்து, நிறைய தண்ணீர் விட்டு அலசவும். ஷாம்பு போடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக வினிகரை தலையில் தடவி, லேசாக மசாஜ் செய்யவும். வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயை சூடு பண்ணி, தலையில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எலுமிச்சைச் சாறைத் தடவி, அரை மணி நேஅர்ம் கழித்து ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். வாரம் ஒருமுறை மருதாணி சிகிச்சையும் நல்ல பலன் தரும். மருதாணிப் பொடியுடன், 4 ஸ்பூன் எலுமிச்சை சாறும், காஃபி பௌடரும் கலந்து அத்துடன் 2 முட்டைகளைச் சேர்த்து டீ வடிகட்டிய தண்ணீருடன் கலக்கி, ஒரு திக்கான பேஸ்டாக தயார் செய்துகொள்ளவும். தேயிலையை தண்ணீரில் கொதிக்கவிட்டு, குளிரவைத்து, வடிகட்டி தயாரிகக்லாம். இவற்றைக் கலந்து மருதாணிக் கலவையை தலையில் தடவி, ஊறவைத்து,அலசவும். முட்டை சேரப்பதை விரும்பாவிட்டால் டீ வடிகட்டிய தண்ணீரை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம்., பழங்கள், கொட்டைகள், தயிர், எலுமிச்சைச் சாறு இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவும்.தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கவும். வைடட்மின் மினரல் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும்பொருட்டு, உங்கள் டாக்டரையும் ஆலோசிகக்வும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply