பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் | Tamil Serial Today Org

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

Loading...

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர் – 2 கப்
ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
லெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

• பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

• வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

• பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN