பூந்தி ரெய்தா

Loading...

பூந்தி ரெய்தாபூந்திக்கு:
கடலை மாவு – நூறு கிராம்
அரிசி மாவு – ஒரு பிடி (பத்து கிராம்)
உப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – கால் லிட்டர்
ரெய்தாவிற்கு:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – கால் லிட்டர்
உப்பு – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு மூன்றையும் இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.
மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து எண்ணெய்க்கு நேராக பூந்திக் கரண்டி அல்லது ஏதாவது கண் உள்ள அரிகரண்டியைப் பிடித்துக் கொண்டு அதில் ஊற்றவும்.
பூந்தி மேலே எழும்பி நன்றாக வெந்ததும் (அமுக்கிப் பார்த்தால் அமுங்கக் கூடாது) அரித்து எடுக்கவும்.
மிளகாய், வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் போடவும்.
வாசனை வந்ததும் கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் போட்டு தயிரை ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
பூந்தியை ஒரு பாத்திரத்தில் போட்டு தயிர் கலவையை அதில் ஊற்றவும். வெங்காயம் போட்டு கிளறி விட்டு மேலே மல்லி இலை தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply