பூண்டு பொடி

Loading...

பூண்டு பொடிதேவையான பொருட்கள்

பூண்டு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
கொப்பரை தேங்காய் – அரை மூடி (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை:

• வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

• பூண்டை தோல் உரித்து வாணலியில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, இறக்கி, ஆறவைக்கவும்.

• நறுக்கிய கொப்பரை தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவைகளை கலந்து மிக்சியில் இட்டு அரைக்கவும்.

• இந்த பூண்டு பொடியை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டாலும் சுவை கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply