பூண்டு பால்

Loading...

பூண்டு பால்தேவையான பொருட்கள் :

பூண்டு – 10 பற்கள்
பால் –150 மி.லி.
தண்ணீர் –150 மி.லி.
மஞ்சள்தூள்–அரை தேக்கரண்டி
மிளகு தூள்–அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு–தேவைக்கு

செய்முறை:

• பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் பூண்டு, பால், தண்ணீர் கலந்து பூண்டு நன்கு வேகும் வரை சிறு தீயில் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது நீரில் கரையும் சத்துக்களும், கொழுப்பில் கரையும் சத்துக்களும் பாலில் கலந்து சிறந்த ஆரோக்கியத்தை தரும்.

• அந்த பாலுடன், மஞ்சள்தூள், மிளகுதூள், பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும். இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. பாலுடன் சேர்த்து பூண்டுவை சாப்பிடுவதால் அதன் காரத்தன்மை குறையும்.

• காசநோய், விட்டு விட்டு உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் உள்ள கட்டிகள் போன்றவைகளை இந்த பால் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகி வரலாம்.

• தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இதை பருகினால் தூக்கம் நன்றாக வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply