புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனை

Loading...

புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனைஉயிர்க்கொல்லி நோயான புற்றுநோயினை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் வினைத்திறன் குறைவாகவே காணப்படுகின்றன.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தற்போது மற்றுமொரு நவீன பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருதியிலுள்ள ரைபோ நியூக்கிளிக் அசிட் (RNA) பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியும் வினைத்திறன் வாய்ந்த பரிசோதனையை சுவீடனைச் உள்ள Umeå பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

இதற்கு ஒரு துளி இரத்தம் மட்டுமே போதுமானதாக காணப்படுவதுடன் பரிசோதனை மூலம் கிடைக்கப்பெறும் பெறுபேறு 96 சதவீதம் உண்மையானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப் பரிசோதனையின்போது 283 பேரின் இரத்த மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 228 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதாகவும், 55 பேருக்கு புற்றுநோய்த்தாக்கம் இல்லை எனவும் கண்டறியப்பட்டள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply