புதிய வசதிகளுடன் அறிமுகமான ஜீப்ரானிக்ஸின் ஹெட்போஃன்

Loading...

புதிய வசதிகளுடன் அறிமுகமான ஜீப்ரானிக்ஸின் ஹெட்போஃன்ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் மைக்குடன் கூடிய புதிய உயர்ரக ஹெட்போஃனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது USB மற்றும் 3.5mm ஸ்டீரியோ இன்புட்டுடன் கூடிய Electro head ஆகும். மேலும் டியூவல் இன்புட் தேர்வும் இதில் உள்ளது.

இதிலுள்ள மற்ற அம்சங்கள்

• டீப் பாஸ்

• USB அல்லது 3.5mm இன்புட்

• 50mm டிரைவர்

• இன் பில்ட் மைக்

• வசதியான மற்றும் மென்மையான பெரிய இயர் பேடுகள்

• வலிமையான ஸ்லீவுடன் கூடிய கேபிள்

• ஒலி அளவு கட்டுப்பாட்டுக் கருவி

• நிறம் மாறும் LED லைட்டுகள்

இந்த எலெக்ட்ரோ ஹெட், இசை, சினிமா மற்றும் விளையாட்டிற்கு ஏற்ற உயர்ரக ஹெட்போன் ஆகும். இது டியூவல் இன்புட் ஆப்ஷன்களுடன் வருகிறது. இன்புட்டிற்காக USB அல்லது 3.5mm ஸ்டீரியோ கனெக்டரைப் பயன்படுத்தலாம்.

இதன் இம்பிடன்ஸ் (மின் தடை) 32 ஓம்கள் ஆகும். இதை கணனிகள், கைப்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் பயன்படுத்தலாம்.

காதுகளை முழுமையாக மூடிக்கொள்ளும் பெரிய இயர் பேடுகளுடன் வரும் இந்த ஹெட் போன் ஒலி இரைச்சல் தடுப்பை அளிக்கும். இயர் பேடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஜீப்ரானிக்ஸின் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இதன் விலை ரூபாய் 1990/- ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply