புதினா சாதம்

Loading...

புதினா சாதம்தேவையான பொருட்கள்:

புதினா – இரண்டு கப்; எலுமிச்சை பழம் – பாதி; பச்சை மிளகாய் – 4
தக்காளி – 1: எண்ணெய் – தேவைக்கேற்ப; கடுகு – சிறிது
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி; கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி; உப்பு – தேவைக்கேற்ப

முதலில் சாதத்தை உதிரியாக வருமாறு வடித்து வைத்து கொள்ளவும். புதினாவை அலசி அதனுடன் 2 பச்சை மிளகாய், உப்பு ஒரு சிட்டிகை, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக கட் செய்து வைக்கவும்.

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவைகளை போட்டு கலக்கி பிறகு பொடியாக கட் செய்த தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும். அதன் பின் உப்பு, சாம்பார் பொடி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் அரைத்த புதினா விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து தயாராக வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும். சுவையான, மணமான புதினா சாதம் தயார்.

இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதோடு, உடல் நலத்திற்கும் நல்லது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply