புடலங்காய் ஊறுகாய்

Loading...

புடலங்காய் ஊறுகாய்பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் – 2
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு – ஒரு கைப்பிடியளவு
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
மிளகு – கால் தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (வற்றல்) – 2

தேவையான‌ பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய புடலங்காயை போட்டு வதக்கிக் கொள்ளவும் . புடலங்காய் வதங்கியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விடவும்.

அதே வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவும்.

மிக்ஸியில் ஆறிய துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய், உப்பு மற்றும் வதக்கிய‌ புடலங்காய் சேர்த்து அரைக்கவும். சுவையான புடலங்காய் ஊறுகாய் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply