பீட்ரூட் பொரியல்

Loading...

பீட்ரூட் பொரியல்பீட்ரூட் – 3
வேகவைத்த பட்டாணி – அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
கீறிய பச்சைமிளகாய் – 2
மிளகாய்வற்றல் – 2
தேங்காய்துருவல் – 2 மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

பீட்ரூடை சுத்தமாக கழுவி தோலை சீவவும். பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட், 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு வேகவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த பீட்ரூட், வேகவைத்த பட்டாணி, உப்பு போட்டு கிளறவும்.
தண்ணீர் நன்கு வற்றிய பின் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply