பீட்ரூட் துவையல்

Loading...

பீட்ரூட் துவையல்தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 250 கிராம்
இஞ்சி – 100 கிராம்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பிளாக் சால்ட் – சுவைக்கு

செய்முறை :

• பீட்ரூட்டை கழுவி தோல் சீவி, நைஸாகத் துருவிக்கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி நறுக்கிச் சாறு எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

• ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.

• சுவைக்கு பிளாக்சால்ட் சேர்த்து கொள்ளவும்.

• இதனை சாண்விச்சுடன் சாப்பிடலாம். தயிர்சாதம், சாம்பார் சாதத்திற்கு சுவையாக இருக்கும். தயிரில் கலந்தும், சாதத்துடன் பிசைந்துச் சாப்பிடலாம்.

பலன்கள்: அனைவரும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அமிலத்தன்மை, மலச்சிக்கல், பசியின்மையைப் போக்கும். தொப்பையைக் குறைக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுவலி, வாயுப் பொருமல் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். கேன்சரைக் குணப்படுத்தும் உணவுகளில் பீட்ரூட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply