பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு | Tamil Serial Today Org

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடு

Loading...

பீடி, சிகரெட், பொடி, புகையிலையின் கேடுபுகையிலையை வாயில் போடுவது, மூக்கில் இடுவது இவை யாவும் மூளைக்கும், இருதயத்திற்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது என்று சிலர் கூறலாம். ஆனால் இதனால் கிடைக்கும் அற்ப நன்மையை விட தீமைகள் மிக அதிகம்.

இதை உபயோகிப்பவர்களின் நல்ல இரத்தம் கெட்டு நெஞ்சு வலி, தலை நோய், பீனிசம், காசம், நீரிழிவு முதலிய நோய்கள் உண்டாவது நிச்சயம். பித்தம் அதிகரித்து கபாலச்சூடு உண்டாகி நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய் முதலியன உண்டாகின்றன.
புகையிலையில் நிக்கோடீன் என்ற கொடிய விஷம் உள்ளது. அரைத்துளி நிக்கோடீன் விஷம் ஆளையே கொல்லவல்லது. புகையிலையை எந்த ரூபத்தில் உபயோகித்தாலும் அது மனிதனின் நரம்பையும் இரத்தக் குழாய்களையும் சீர்குலைத்து விடும்.
புகையிலையில் உள்ள தார் சத்தும், நிக்கோடீனும் வாய்த் திசுக்களைக் கெடுத்து சுவை குன்றச் செய்துவிடும். புற்றுநோய் இவர்களை எளிதில் பீடிக்கும். புகைப்பவர்களின் இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்பட வழி உள்ளது.

Loading...
Rates : 0
VTST BN