பிறக்கும் குழந்தை நிறைவான நிறையுடன் பிறக்க !!

Loading...

பிறக்கும் குழந்தை நிறைவான நிறையுடன் பிறக்க !!பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது.
மிகவும் இயற்கையான வைட்டமின் டி, சூரிய ஒளியில் உள்ளது. உணவு என்று எடுத்துக் கொண்டால், வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவு என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.
எனவே வைட்டமின் டி குறைபாடு சூரிய ஒளி பற்றாக்குறையால் ஏற்படுவது என்பது தெளிவாகிறது. இதனால் கால்சியம், பாஸ்பரஸ், ஆகிய சத்துக்களும் பாதிக்கப்படுகிறது மேலும் எலும்பு வளர்சிதை மாற்றங்களும் பாதிப்படைகிறது.
ஏற்கனவே வைட்டமின் டி குறைபாடு, கருவின் அளவைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது
கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதஙக்ள் மற்றும் 2ஆம் மூன்று மாதங்கள் காலக்கட்டத்தில் வைட்டமின் டி சத்தைப் பொறுத்து குழந்தையின் எடை தீர்மானிக்கப்படுகிறது.
வைட்டமின் டி மட்டும் குறைபாடாக இருந்து மற்றபடி ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிப் பெண்களில், வைட்டமின் டி குறைபாட்டினால் பிறக்கும் குழந்தை எடை வழக்கத்தை விட 46கிராம் எடை குறைவாக பிறப்பதாக, ஆய்வில் ஈடுபட்ட ஆலிசன் ஜெர்னான்ட் என்ற மருத்துவ ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதே முதல் 3 மாதத்தில் போதிய வைட்டமின் டி தாயார் உடம்பில் இல்லையெனில் கருவிலேயே குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார் அவர்.
இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ நிபுணர்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள் வெளியிலேயே தலைகாட்டாமல் வீட்டினுள் முடங்கும் பழக்கத்தை கைவிடுங்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் என்பதை மறந்து விடாதீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply