பிரட் புட்டிங்

Loading...

பிரட் புட்டிங்பிரட் – 6 ஸ்லைஸஸ்
பால் – ஒன்றரை கப்
முட்டை – 3
சர்க்கரை – அரை கப்
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
திராட்சை – சிறிது
பிரவுன் சுகர் – 2 தேக்கரண்டி

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை நன்கு அடித்துக்கொள்ளவும். அத்துடன் பால், எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி வைக்கவும்.

பிரட்டை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் போட்டு, அதில் முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

பிறகு ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் கவரினால் பாத்திரத்தை மூடி, அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்கவும். சுமார் ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு பின்பு எடுத்து, அதன் மேல் திராட்சைகளை அடுக்கவும். அத்துடன் பிரவுன் சுகரினையும் மேலே தூவி ஓவனில் வைத்து 350 டிகிரி Fல் சுமார் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.

இப்போது சுவையான பிரட் புட்டிங் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply