பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க சில வழிகள்

Loading...

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க சில வழிகள்கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் அருமையான அனுபவம். இந்த கர்ப்ப காலத்தில் இனிமையான பல அனுபவங்களை அனுபவித்தப் பின்னர், ஒருசில சங்கடத்தையும் பெண்கள் அனுபவிக்கக்கூடும். அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள். ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் இருந்தால், அவை அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் வயிறானது அதிக அளவில் விரிவடைந்து, பின் திடீரென்று சுருங்குவதால், அவை மார்க்குகளாகிவிடுகின்றன. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலும் போக்க முடியாது. இருப்பினும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், அதனை மறைக்க முடியும். சிலருக்கு எப்படி பிரபலங்கள் மட்டும் பிரசவத்திற்கு பின்னரும் குட்டையான மற்றும் கவர்ச்சியான ஆடைகளை அணிகின்றனர்? அவர்களுக்கு எந்த ஒரு ஸ்ட்ரெட்ச் மார்க்கும் இருக்காதா? என்று கேட்கலாம். உண்மையை சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் நிச்சயம் இருக்கும். ஆனால் அதனை மறைக்க சில ட்ரிக்ஸ்களைப் பின்பற்றுகின்றனர்.
டேனிங் லோசன்களைப் பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்கலாம். மேலும் தற்போது மார்கெட்டுகளில் நிறைய டேனிங் லோசன்கள் உள்ளன. லோசன் பயன்படுத்த பிடிக்காவிட்டால், டேனிங் லோசன்களாவது ஸ்ப்ரே வடிவிலும் கிடைக்கின்றன. எனவே இத்தகையவற்றைப் பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்கலாம்.
மற்றொரு சிறந்த ஐடியா, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் டாட்டூ போட்டுக் கொள்வது. இது தற்காலிகமாக இருந்தாலும் சரி, நிரந்தரமானதாக இருந்தாலும் சரி, இதனால் ஸ்ட்ரெட்ச் மார்க் மறைக்கப்படுவதோடு, ஸ்டைலாகவும் இருக்கும்.
இருப்பதிலேயே எளிமையான வழி என்றால் இது தான். அது என்னவென்றால், நல்ல அழகான ஸ்ட்ரெட்ச் மார்க் வெளியே தெரியாவாறான ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்துவது.
சருமம் அழகாக இருக்க வேண்டுமானால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருப்பதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் லேசாக மறையவும் ஆரம்பிக்கும். ஆகவே தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.
எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதிலும் ஆலிவ் ஆயில் கொண்டு தினமும் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply