பியூட்டி பார்லரில் கவனிக்க வேண்டியவை

Loading...

பியூட்டி பார்லரில் கவனிக்க வேண்டியவைமுதல் விஷயம் சுத்தமும் சுகாதாரமும். ஃபேஷியல் ஹெட் பேன்ட், முகம் துடைக்கிற டிஷ்யூ, ஃபேஷியல் டிரெஸ், ஸ்பா காலணி என இப்போது எல்லாமே டிஸ்போசபிள்தான். வாக்சிங் செய்யக்கூட வாக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் எனப்படுகிற டிஸ்போசபிள் பட்டைகளைத் தான் உபயோகிக்கிறார்கள். அப்போதுதான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இன்ஃபெக்ஷன் வராமலிருக்கும்.

நீங்கள் செல்கிற பார்லரில் இவற்றையெல்லாம் பின்பற்றுகிறார்களா எனப் பாருங்கள். பெடிக்யூர், மெனிக்யூர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் முறையாக ஸ்டெரிலைஸ் செய்யப்படுகின்றனவா என்றும் பாருங்கள். உங்களுக்கு உபயோகிக்கிற கருவிகள் அப்படி ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டவையா எனக் கேட்பது உங்கள் உரிமை.

ஒருவருக்கு உபயோகிக்கிற சீப்பு மற்றும் பிரஷ்ஷை முறையாக சுத்தப்படுத்தாமல் அடுத்தவருக்கு உபயோகிக்கக் கூடாது. பார்லர்களில் உங்களுக்குப் பயன்படுத்துகிற டவல்கள் சுத்தமாக, துவைத்து மடிக்கப்பட்டு, உலர்ந்த நிலையில் உள்ளனவா எனப் பாருங்கள். ஈரத் துணிகளின் மூலம் கிருமித் தொற்று வேகமாகப் பரவும். மரு நீக்கும் காட்டரைசேஷன் சிகிச்சையில் ஒவ்வொரு முறையும் புதிய ஊசியைத்தான் உபயோகிக்க வேண்டும். உபயோகித்த ஊசியைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது.

ரேசரும் இப்படித்தான். ஃபேஷியல் செய்து முடித்ததும், கடைசியாக சன்ஸ்கிரீன் தடவி அனுப்ப வேண்டும். பிளீச் செய்யும்போது, உங்களது தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். சருமத்தில் உள்ள முடியின் நிறத்தை மாற்றாமல், வெறுமனே சருமத்தை மட்டும் சுத்தப்படுத்தக் கூடிய பிளீச் இப்போது வந்து விட்டது.

சரும ரோமங்களின் நிறம் மாறாமலிருக்க வேண்டுமென நினைப்போர் இதைச் செய்து கொள்ளலாம். வாக்ஸ் செய்கிற போது, முதலில் வாக்ஸ் செய்யப்பட வேண்டிய பகுதியை சுத்தப்படுத்தி, பிறகு வாக்ஸ் செய்து, கடைசியாக போஸ்ட் வாக்ஸ் ஜெல்லோ, கிரீமோ அல்லது மாயிச்சரைசரோ உபயோகிக்கிறார்களா எனப் பாருங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply