பால் கிழங்கு

Loading...

பால் கிழங்குமரவள்ளிக் கிழங்கு – 500 கிராம்
சீனி – 250 கிராம்
தேங்காய் பால் – 2 கப் (முதற்பால்)
ஏலக்காய்பொடி – 1/2 தேக்கரண்டி

மரவள்ளிக் கிழங்கினை தோல் உரித்து, நடுவில் உள்ள வேரினை எடுத்து சிறிய துண்டங்களாக வெட்டவும்.
பின்பு 2 கப் தண்ணீர் விட்டு மரவள்ளிக்கிழங்கினை நன்கு கரையும் வரை அவிக்கவும்.
அவிந்த பின் அதனை குழிக்கரண்டியினால் மசித்து கொள்ளவும். (நன்றாக மசிக்க வேண்டாம்)
அடுப்பினை மெல்லிய தீயில் வைத்திருக்கவும்.
மசித்த கிழங்கினுள் சீனியை போட்டு கிளறிக் கொள்ளவும்.
அடுத்து 2 கப் பாலினையும் விட்டு பால் கொதிக்கும் வரை கிளறிக் கொள்ளவும்.
பால் கொதித்தவுடன் ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply