பாசிப்பயறு தண்ணிக் குழம்பு

Loading...

பாசிப்பயறு தண்ணிக் குழம்புபாசிப்பயறு – நூறு கிராம்
சின்ன வெங்காயம் – ஐம்பது கிராம்
தக்காளி – இரண்டு
புளி – ஒரு சிறிய நெல்லிக்காயளவு
மிளகாய்பொடி – ஒரு டீஸ்பூன்
மல்லிப்பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
அரைக்க:
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பூண்டு – இரண்டு பல்
தேங்காய்துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

பாசிப்பயறை வாசனை வர வறுத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி அரைத்த விழுதை சேர்த்து கலக்கி வைக்கவும்.
மிளகாயை கீறி, வெங்காயத்தை குறுக்கில் இரண்டாகவும் தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்கவும்.
பயறு பாதி வெந்ததும் வெங்காயம், தக்காளி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஆறு நிமிடம் கொதிக்க விடவும்.
பின் இறக்கி விட்டு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் வெடிக்க விட்டு இரண்டு சின்ன வெங்காயங்களை தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply