பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

Loading...

பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பிடிப்போர் பலர். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ, அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதோடு, நோயின் தாக்கம் ஏற்படாதவாறு உடலைப் பாதுகாக்கிறது.

எப்படி நம்மில் பலருக்கும் எது ஆரோக்கியமானதோ அது பிடிக்காதோ, அதேப்போல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பாகற்காயும் பிடிக்காது.

சுவாச கோளாறுகள்

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

கல்லீரல் பிரச்சனைகள்

தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருக்கள்

உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply