பழக் கேசரி

Loading...

பழக் கேசரிநறுக்கின ஆப்பிள் – அரை கப்
நறுக்கின அன்னாசி – அரை கப்
திராட்சை – 100 கிராம்
சர்க்கரை – இரண்டரை கப்
கடலெண்ணெய் – 100 மில்லி
நெய் – 25 கிராம்
முந்திரி – கால் கப்
ரவை – ஒரு கப்
உப்பு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் – 2

ஆப்பிள், அன்னாசி, திராட்சை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஊற வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய், நெய் இவற்றை காயவைத்து அதில் முந்திரி ரவை சேர்த்து வறுத்து இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
ரவை வெந்து கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து சர்க்கரை 2 கப், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு அதில் ஊற வைத்த பழங்களை சேர்க்கவும். பின் ஏலக்காயினை பொடி செய்துப் போட்டு கிளறி இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply