பளபளப்பான சருமத்தைப் பெற நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Loading...

பளபளப்பான சருமத்தைப் பெற நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!சருமத்தின் ஆரோக்கியம், முழு உடலின் ஆரோக்கியத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அழகான சருமத்திற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் போன்றவை அடங்கிய உணவுகள், பொலிவற்ற சருமத்தை சரி செய்து, நல்ல பளபளப்பையும், இளமையான தோற்றத்தையும் தருகிறது. அழகை அதிகரிக்க இப்படியெல்லாமா செய்வாங்க.. நினைச்சாலே என்னவோ போல இருக்குது போங்க? ஆனால் மறுபுறம், உங்கள் நாக்கிற்கு சுவையை அள்ளித் தரும் சில உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித நன்மைகளையும் தராமல், சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஆகவே உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், அவை கீழே பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆல்கஹால் ஆல்கஹால் பாட்டிலிலேயே, அதிக அளவிலான ஆல்கஹால், ஆபத்தை ஏற்படுத்தும் என்ற முன் எச்சரிக்கை இருக்கும்.ஆனால் மிதமான ஆல்கஹால் உட்கொள்ளலும் சருமத்தில் எதிர்மறை பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஆல்கஹால் நமது தோலில் உள்ள நீர்ச்சத்தை பிரித்து நீக்கி,சருமத்தை உலர்வாகவும், கடினமானதாகவும் மாற்றுகிறது. இதுவே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே, முதுமை அடைதலுக்கு காரணமாக அமைகிறது
அதிக அளவில் உப்பை எடுத்துக் கொள்ளுவது, உங்கள் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. உங்கள் உணவில் உள்ள அதிக அளவிலான உப்பு, கண்களில் பொங்குதலையும், முகம் வீக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.
நீங்கள் ஒரு நாளைக்கு, இரண்டு கப்புக்கு மேல், காபிகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், உங்கள் சருமம் பொலிவிழந்து, மென்மையை இழந்து காணப்படும். காபி மற்றும் காபி தயாரிப்புகளை கட்டுப்பாடின்றி எடுத்துக் கொண்டால், அது கார்டிசால் என்ற மன அழுத்தத்திற்கான ஹார்மோனை வெளியேற்றுகிறது. இது சரும மென்மையுடன் தொடர்புடைய ஹார்மோன் ஆகும். இதனால் சருமத்தில் முதிர்ந்த நிலையும், பொலிவிழந்த தன்மையும் ஏற்படுகிறது.
நீங்கள் முந்தைய இரவில் அதிக அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்டதால், மறுநாள் காலையில் உங்களுக்கு முகத்தில் பருக்கள் தோன்றியதா? சில நேரங்களில் அவ்வாறு நடக்கலாம். பால் பொருட்கள், உடலில் சளியை தோற்றுவித்து பாக்டீரியாக்கள் உடலில் புக அனுமதிக்கிறது. மேலும் அலர்ஜியை தோற்றுவித்து, சருமத்தில் பருக்களை உண்டாக்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply