பல்வேறு நற்பலன்கள் கொண்ட சிவப்பு ஒயின் ! இதய நோய்களிலிருந்து காக்கும் அற்புதம் !!

Loading...

பல்வேறு நற்பலன்கள் கொண்ட சிவப்பு ஒயின் ! இதய நோய்களிலிருந்து காக்கும் அற்புதம் !!‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்கிற பழமொழி பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் பல்வேறு நற்பலன்கள் கொண்ட சிவப்பு ஒயினும் தற்போது சேர்ந்துள்ளது.
அதிகளாவிய ரத்த குளுகோஸ் உடலில் சேர்வது இன்சுலீன் குறைப்பாட்டையோ அல்லது இன்சுலீனை உடல் உபயோகிக்கும் தன்மையை நிறுத்துவதோ டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும்.
குழந்தைகள், இளம் வயதினர் தொடங்கி முதியோர் வரை அனைவரையும் தாக்கும் இந்த நோய்க்கு தினசரி இரவில் அளவான சிவப்பு ஒயின் குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுவாக இந்த வகை நீரிழிவு நோயால், இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல். கொழுப்பு உடலில் இல்லாது போவதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இஸ்ரேலின் நெகேவ் நகரிலுள்ள பென்-குரியான் பல்கலைக்கழகம், நடத்திய ஆய்வில் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 224 பேரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கு உட்படுத்தியது.
இவர்களை விருப்பமான மத்திய தரைக்கடல் பகுதி சார்ந்த உணவுடன் இரு பாகமாக பகுத்து, ஒவ்வொரு இரவும் ஐந்து அவுன்ஸ் தண்ணீரோ அல்லது சிவப்பு ஒயினோ பருகுமாறு பரிந்துரைக்கப்பட்டது.
இரு ஆண்டுகள் கழித்து பார்த்ததில் இதில் தண்ணீரைப் பருகியவர்களைக் காட்டிலும், சிவப்பு ஒயினைப் பருகியவர்கள் சிறப்பான தூக்கம், சீரான ஜீரண சக்தி மட்டுமல்லாது இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல். கொழுப்பும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, ஐந்து அவுன்ஸ் ஒயின் உடல் நலத்தைப் பாதுகாத்து, மருத்துவர்களை அணுக வேண்டிய தேவையைக் குறைக்கும் என இந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply