பருவை விரட்டுவோம்!

Loading...

பருவை விரட்டுவோம்!முகப்பருவை போக்கச் சிறிதளவு ஜாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

பரு உள்ளவர்கள் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டில் காய்கறி, கீரைகள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் இருந்து கழிவை வெளி ஏற்ற இவை பயன்படும்.

பருக்களைக் கிள்ளி விடக்கூடாது. கிள்ளிவிட்டால் அதில் உள்ள நீர் பரவி மேலும் பருக்கள் தோன்றும். கிள்ளிவிட்ட இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு, முகம் விகாரமாகி விடும். அவை தானாக உதிரும்படி விட்டு விட வேண்டும்.
முகப்பரு வந்த இடங்களில் வெள்ளை வெங்காயத்தை அறுத்துத் தேய்க்க குணமாகும்.

ஒரு வாரத்திற்கு ஒருமுறை ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து நீராவியை முகத்தில் படும்படிச் செய்தால் முகத்தில் உள்ள அழுக்கள் வெளி ஏறும் பரு வராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply