பருக்கள் ஏன் வருகின்றன? அவற்றைத் தடுக்க முடியுமா?

Loading...

பருக்கள் ஏன் வருகின்றன  அவற்றைத் தடுக்க முடியுமாசருமம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கக் காரணம் , சீபம் என்ற எண்ணெய் உடலில் சுரப்பதுதான். ஹார்மோன்களின் சமச் சீரற்ற தன்மையால், சீபம் எண்ணெய் சிலருக்கு அதிகமாக சுரக்கும். இந்த சுரப்பிகளில் தடை ஏற்படுவது அல்லது சீபம் எண்ணெய் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால், முகத்தில் பருக்கள் போல சிறு கட்டிகள் உருவாகின்றன. அது மட்டுமின்றி அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனநலக் கோளாறுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், சுற்றுச் சூழல், தலையில் பொடுகு பாதிப்பு இருத்தல், போன்ற காரணங்களாலும் பருக்கள் வருகின்றன.
சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைக்க , சருமம் எந்த வகை என்பதை அறிந்து அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை முகத்தைக் கழுவலாம். முகத்தை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்கவேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் , பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply