பனீர் குடைமிளகாய் மசாலா

Loading...

பனீர் குடைமிளகாய் மசாலாபனீர் – 200 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – அரை மேசைக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப்
குடைமிளகாய் – 2
மிளகாய்தூள் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

பனீரையும், குடைமிளகாயையும் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பனீரை போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பனீரை தனியாக வைக்கவும். தக்காளியை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். குடைமிளகாய் வதங்கியவுடன் தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு வதக்கவும்.
பின் தக்காளி சாஸ், உப்பு, சிறிதளவு சர்க்கரை, வறுத்த பனீர் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply