பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க.

Loading...

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க.சரும கருமையைப் போக்க…

சருமத்தில் உள்ள கருமையைப் போக்க கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.

கரும்புள்ளிகளைப் போக்க…

முகத்தில் ஆங்காங்கு புள்ளிகள் காணப்பட்டால், அதனைப் போக்க கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நேரம் மசாஜ் செய்து நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் வந்த வடுக்கள் நீக்கிவிடும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு…

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து 20 நிமிடம் நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறையாவது தவறாமல் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சென்சிடிவ் சருமத்திற்கு…

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply