பட்டுச் சேலைகளை துவைக்கும் முறை

Loading...

பட்டுச் சேலைகளை துவைக்கும் முறை* பட்டுச் சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல், ஒவ்வொருமுறை உடுத்திய பிறகும் ட்ரை க்ளீனிங்குத் தான் போடவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
*மிகவும் மென்மையான, உடலுக்கு உபயொகிக்கும் சோப்பையோ அல்லது மென்மையான துணி துவைக்கும் சோப்புத்தூளையோ பட்டுச் சேலையைத் துவைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
* சுடுநீரில் நனைக்கவோ அலசவோ கூடாது. குளிர்ந்த நீரைத்தான் பயன்படுத்தவேண்டும்.
* அதேபோல் பட்டு சேலையை ஊற வைத்து துவைக்ககூடாது. சோப்பை மிருதுவாகத் தடவி கைகளினால் மென்மையாகத் துவைக்கவேண்டும்.
* துவைக்கும்போது சேலையை சுழற்றுவதோ, இறுக்கிப் பிழிவதோ கூடாது.
* ப்ரஷ் போட்டு பட்டு சேலையைத் துவைக்கக் கூடாது.
* துவைத்து அலசிய உடனேயே சேலையை நிழலில் காய வைத்துவிட வேண்டும். சேலையில் இருக்கும் நுரையை வெளியேற்ற இறுக்கிப் பிழியக் கூடாது.
* எப்போதும் மிதமான சூட்டில்தான் பட்டு சேலையை இஸ்திரி செய்யவேண்டும். அதேபோல் ஒவ்வொருமுறை இஸ்திரி போடும்பொழுதும் ஒரே மாதிரி மடிக்காமல் மடிப்பானது மாறி மாறி வருவதுபோல மடித்தோமானால், மடிப்புகளில் புடவை கிழிந்து போவது தவிர்க்கப்படும்.
* சேலையில் கறையானது பட்ட உடனேயே காட்டன் துணி அல்லது பேப்பர் டவலை அந்த்க் கறையின்மேல் வைத்து முடிந்தவரை ஒற்றி எடுக்கவேண்டும். பின்பு ட்ரை கிளீனிங்க்குத் தருவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply