பட்டர் கேக்

Loading...

பட்டர் கேக்மைதா மாவு – ஒன்றே முக்கால் கப்
பட்டர் – அரை கப்
சீனி – ஒரு கப்
வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
ஆல்மண்ட் எசன்ஸ் – அரை தேக்கரண்டி
பால் – அரை கப்
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
டார்ட்டர் க்ரீம் – ஒரு சிட்டிகை
உப்பு – கால் தேக்கரண்டி

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, சலித்து வைத்துகொள்ளவும். இளகிய பட்டரை ஒரு பத்திரத்தில் போட்டு 2 நிமிடங்கள் அடிக்கவும். பிறகு அதனுடன் முக்கால் கப் சீனியை சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் அடிக்கவும்.

ஒரு முட்டையின் மஞ்சள் கருவை தனியே எடுத்து அதனை மட்டும் சேர்த்து அடிக்கவும். பிறகு மற்றொரு முட்டையின் மஞ்சள் கருவை பிரித்தெடுத்து சேர்த்து மீண்டும் அடிக்கவும்.

வெனிலா மற்றும் ஆல்மண்ட் எசன்ஸ்சை சேர்க்கவும். மீண்டும் சிறிது அடிக்கவும். பின்னர் சிறிது மைதா மாவை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.

அதன் பிறகு கொஞ்சம் பாலை சேர்த்து அடிக்கவும். இப்படியே மாவையும் பாலையும் மாற்றி மாற்றி சேர்த்து அடிக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு நுரை வரும் வரை அடிக்கவும்.

இதனுடன் cream of tartar சேர்த்து மீண்டும் அடிக்கவும். Soft Peak நிலை வரும்.

பிறகு கால் கப் சீனியை சேர்த்து அடிக்கவும். பிறகு Stiff Peak நிலை வரும்.

இப்பொழுது மாவையும் அடித்த வெள்ளை கருவையும் சேர்த்து கலக்கவும். அடிக்க கூடாது. இரண்டும் சேர்ந்தால் போதும். அதிகமாக கலக்க வேண்டாம்.

8 inch Pan -ல் butter paper போட்டு பாதி மாவை ஊற்றி அவனில் 20-25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

கேக் நடுவில் ToothPick வைத்து பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும். பிறகு மீதி பாதியை இதேபோல ஆவனில் வைத்து எடுக்கவும்.

நன்றாக ஆறியபின் butter cream or cream cheese frosting தடவி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மேற்புறமும் தடவி சாப்பிடலாம்.

இந்த பட்டர் கேக் இரண்டு அடுக்காக இருக்கும். முட்டையின் வெள்ளை கருவை தனியாக அடித்து கடைசியில் கலப்பதால் கேக் நல்ல மிருதுவாக வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply