பக்க வாதம் – ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குறைக்க உதவும் சத்து நிறைந்த சாக்லேட்

Loading...

பக்க வாதம் - ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குறைக்க உதவும் சத்து நிறைந்த சாக்லேட்“சாக்லேட்” என்றாலே பொதுவாக அதில் சர்க்கரை, பால் மற்றும் கொழுப்பு சத்துடன் ரசாயன பொருள் கலக்கப்படும். அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.
ஆனால் சத்து நிறைந்த அத்துடன் மருந்தாக பயன் படக்கூடிய புதிய வகை சாக்லேட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
அதில் மூலிகை தொழில் நுட்பம் கலக்கப்பட்டுள்ளது. போஸ்டனை சேர்ந்த குகா ஸோகோ என்ற நிறுவனம் பொலிவியா மற்றும் பெருநாட்டில் ஆன்டியான் மாகாணத்தில் உள்ள சிறிய வகை மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சத்து பொருள் மூலம் இந்த சாக்லேட் தயாரித்துள்ளது.
இதில் இருந்து ‘ககோயா’ எனப்படும் இனிப்பற்ற மூலப் பொருளை எடுத்து கலந்துள்ளனர். ‘ககோயா’ மூலப்பொருளில் ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ மற்றும் தாதுக்கள் உள்ளன.
அவை மருந்தாக பயன்படுவதாக ‘குகா ஸோகோ’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து 35 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்த சாக்லேட் பக்க வாதம் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குறைக்கும் தன்மை கொண்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply