நுரையீரல் பிரட்டல் | Tamil Serial Today Org

நுரையீரல் பிரட்டல்

Loading...

நுரையீரல் பிரட்டல்நுரையீரல் – 250 கிராம்
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – 2
தயிர் – ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்
மட்டன் மசாலா – அரை தேக்கரண்டி

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நுரையீரலை போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வேக வைத்து எடுத்துள்ள நுரையீரலுடன் எல்லா மசாலா தூள்களையும் போட்டு பிரட்டவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிரையும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள் போட்டு ஒரு முறை வதக்கிவிட்டு, பின்னர் பிரட்டி வைத்துள்ள நுரையீரலை போட்டு கிளறிவிடவும்.

ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

நுரையீரல் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியவுடன் திறந்து கிளறி விட்டு இறக்கி விடவும்.

இப்போது சுவையான நுரையீரல் பிரட்டல் தயார். இதனை பக்க உணவாக சாப்பிடலாம்.

Loading...
Rates : 0
VTST BN