நீங்க எப்படி தூங்குவிங்க? உங்கள் குணத்தை கண்டறிவோமா?

Loading...

நீங்க எப்படி தூங்குவிங்க உங்கள் குணத்தை கண்டறிவோமாநாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தூங்குவோம். நாம் தூங்கும் முறையை வைத்து நம் குணங்கள் அமையும் என்று ஆய்வில் கூறப்படுகிறது….

தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி (தி பேடஸ்) தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர். இடதுபுறமோ, வலதுபுறமோ கையை கீழே இறக்கி (லாக்) ஒருபக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாய் பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.

இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரை எதற்கெடுத்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் சிந்தனை அதிகம் இருக்கும்.

சிலர் கை, கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து (தி சோல்ஜர்) தூங்குவார்கள். இதுபோன்று உறங்குபவர்கள் நாவடக்கம் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் (தி ஸ்டார்பிஷ்) பெருந்தன்மை கொண்டவர்களாகவும், பணிவான தன்மை பெற்றவர்களாவும் இருப்பர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply