நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா? புகைப்படத்தின் மூலம் உணர்ச்சிகளை சொல்லும் புதிய கருவி

Loading...

நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா புகைப்படத்தின் மூலம் உணர்ச்சிகளை சொல்லும் புதிய கருவிநமது புகைப்படத்தை வைத்தே முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை தெரிவிக்கும் புதிய கருவியை மைக்ரோசாப்ட் நிறுவனம், Project Oxford என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது.
புகைப்படத்தில் இருக்கும் ஒருவரின் முகத்தை வைத்தே அவர் எந்த விதமான உணர்வில் உள்ளார் என்பதை தெரிவிக்கும் விதமாக மைக்ரேசாப்ட் நிறுவனம் ப்ராஜக்ட் ஆக்ஸ்போர்டின் கீழ் புதிய கருவியை உருவாக்கியுள்ளது.

அதன்படி, நமது புகைப்படங்களை www.projectoxford.ai/demo/Emotion#detection என்ற தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர் புகைப்படத்தில் உள்ள ஒருவரது முகத்தை வைத்தே அவர் எந்த வித உணர்ச்சியில் உள்ளார் என்பதை அது நமது தெரிவிக்கும்.

இதன் மூலம் கோபம், பயம், வெறுப்பு, மகிழ்ச்சி, இகழ்ச்சி, கவலை, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளை கணக்கிடலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வயதை அறியும் கருவியையும், புகைப்படத்தில் இருப்பவர்கள் நண்பர்களா அல்லது இரட்டையர்களா என்பதை கண்டறியும் கருவியையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply