நீங்கள்…நடந்தால் பணம் சம்பாதிக்கலாம்!

Loading...

நீங்கள்...நடந்தால் பணம் சம்பாதிக்கலாம்!நடப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கும் திட்டத்தை நிஸான் பஹர் மற்றும் ப்ராங்கி இம்பெசி ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக 10 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன, ஜப்பான் நாட்டு முதலீட்டாளர்களே இதில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது, இந்த திட்டத்தின்படி நம்முடைய கைப்பேசியில் இதற்காக செயலியை தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இந்த செயலியானது நாம் நடப்பதை அளக்கும், 10,000 அடிகள் நடந்தால் ஒரு பிட்வாங்கிங் டொலரை சம்பாதிக்கலாம்.

சராசரியாக 5 மைலுக்கு ஒரு பிட் வாக்கிங் டொலர் கிடைக்கும்.

ஜப்பானின் மின்னணு நிறுவனமான முரடா, இதற்கென கையில் அணிந்துகொள்ளக்கூடிய பட்டை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்மார்ட்கைப்பேசிக்கு பதிலாக இந்தப் பட்டையை அணிந்துகொண்டும் நடக்கலாம்.

பலரும் நடக்கும்போது தாம் நடக்கும் தூரத்தை அளக்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதை பார்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஊழியர்கள் நடப்பதின் மூலம் சம்பாதிக்கும் தொகையை அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply