நவதானிய ஆம்லெட்

Loading...

நவதானிய ஆம்லெட்தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை – தலா 50 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 1,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவுமம்.

• கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்து தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும்.

• இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, நன்றாக கலந்து வைக்கவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஆம்லெட் போல ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். பலன்கள்: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply